காரைநகரில் தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (22.07.2024) ஆலங்கண்டு மயானத்துக்கு அருகாமையில் எதிர்பாராத தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இவ் தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு எமது சபையோடு இணைந்து செயற்பட்ட யாழ்ப்பாண மாநகரசபை ஊழியர்கள், இராணுவம், Every Day மற்றும் கட்டுப்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பிரதேச சபை செயலாளர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் மற்றும் சபையின் வேலை மேற்பார்வையாளர் மற்றும் சக ஊழியர்களுக்கும் நன்றிகள்.

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.

உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு செயற்றிட்டம்

பசுமை கொண்ட இடமாக மாற்றுவோம்

உலக சுற்றாடல் தின வாரச் செயற்றிட்டமான மரங்களை நாட்டுவோம் என்ற தொனிப்பொருளில் காரைநகர் பிரதேச சபையினால் 05.06.2024 காரைநகர் வலந்தலை காரைநகர் வரவேற்பு பலகையை அண்டிய இடங்களில் நிழல் தரும் மரங்கள் நாட்டப்பட்டு பாதுகாப்பு அரண்களும் அமைக்கப்பட்டன.

* நல்ல காற்றை சுவாசிப்போம்.

* பசுமை நிலமாக மாற்றுவோம்.

* அடுத்த தலைமுறைக்கு நல்ல சூழலை உருவாக்குவோம்.

இவ் நிகழ்ச்சிக்கு மரக்கன்றுகளை அன்பளிப்பு செய்த GREEN LAYER - Environmental Organization, Jaffna, Srilanka. அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்து கொள்கின்றோம்.

காரைநகர் கடற்கரையோர “நெகிழி” அகற்றல் செயற்பாட்டில் அரச திணைக்களங்கள் ஒன்றிணைவு.

மாகாண ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலுடனான கடற்கரையோர கழிவுகளை அகற்றும் செயற்பாடு காரைநகர் கோவளம் கடற்கரையில் இன்று(04:04:2024) காலை 8:00மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இச் செயற்பாட்டில் காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் ,கரையோரப் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ் கழிவுகளை அகற்றும் செயற்பாட்டில் பெருமளவு பிளாஸ்டிக்(நெகிழி) கழிவுகள்,கண்ணாடிப் போத்தல் என்பன சேகரிக்கப்பட்டு சபையின் திண்மக்கழிவுகள் தரம்பிரிக்கும் நிலையத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டன.

இச் செயற்பாடு பொதுமக்கள்,மற்றும் சமூக அமைப்புக்களிடையே கழிவுகள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்தது எனலாம்.

மீள்இயக்கம் பெறும் காரைநகர் சக்கலாவோடை மீன் சந்தை

இன்று முதல் சக்கலாவோடை மீன் சந்தை விற்பனை மீண்டும் 10.04.2024 இல் இருந்து ஆரம்பம். வியாபாரிகள் ,பொதுக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு.