12 ஒளியூட்டல் வேகக்கட்டுப்பாட்டு அடையாளப் பலகைகள் – ROAD SAFTY

பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் பாடசாலைக்கு அண்மிய வீதிகளில் வாகனங்களின் போக்குவரத்தினால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் முகமாக காரைநகர் பிரதேச சபையினால் 12 ஒளியூட்டல் வேகக்கட்டுப்பாட்டு அடையாளப் பலகைகள் 06 பாடசாலை வீதிகளில் நிறுவப்பட்டுள்ளன.

01. யா/வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை

02. யா/வலந்தலை வடக்கு அ.மி.த.க வித்தியாலயம்

03. யா/மெய்கண்டான் வித்தியாலயம்

04. யா/யாழ்ற்றன் கல்லூரி ஆரம்ப பிரிவு

05. யா/ஆயிலி சிவஞ்ஞானோதய வித்தியாசாலை

06. யா/சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயம் ஆரம்ப பிரிவு

மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு ரூபா 50000.00 பெறுமதியான இரு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காரைநகர் பிரதேச சபை செயலாளர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு ரூபா 50000.00 பெறுமதியான இரு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

தாய் சேய் நலன் கருதி தாய்மார்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வு

01.10.2024 அன்று நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) என்ற அடிப்படையில் தாய் சேய் நலன் கருதி தாய்மார்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வானது காரைநகர் பிரதேச சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. 28 தாய்மார்களுக்கு தலா ஒவ்வொருவருக்கும் 8800 ரூபா பெறுமதியுடைய தானிய வகை உலர் உணவுகள் (கடலை, பயறு, கௌப்பி & உளுந்து) வழங்கப்பட்ட போதான சில பதிவுகள்..

"குழந்தையின் பள்ளிக்கூடம் தாயின் இதயம்" (துருக்கி பழமொழி)

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல்

எமது சபைக்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் முகமாக சபை ஒதுக்கீட்டில் நிலைபேறான_அபிவிருத்தி_இலக்கின் கீழ் (SDG)

2024.09.13 வெள்ளிக்கிழமை

காலை 10.00 மணிக்கு

காரைநகர் பிரதேச சபை மண்டபத்தில்

செயலாளர் தலைமையில் வாழ்வாதார உதவியாக 18 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஒரு மாத கொல்லைப்புற கோழிக்குஞ்சுகள் 15 வீதம் வழங்கி வைக்கப்பட்டன.

கால் நடை அபிவிருத்தி போதனாசிரியர் திருமதி. சுவர்ணன் ரபிந்தா அவர்கள் கோழி வளர்ப்பு தொடர்பாக அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனையினை வழங்கினார்.

"பெண்கள் நிலையான வளர்ச்சியைத் திறக்கும் சாவிகள் மட்டுமல்ல நாம் விரும்பும் ஆரோக்கியமான மற்றும் அதிக நெகிழ்ச்சியான சமூகங்களின் மையங்களும் இவர்களாவர்"

நிதி உதவியை வழங்கும் உலக வங்கியினர் காரைநகர் வருகை

LDSP திட்டத்தின் கீழ் BT 4 , PT 3 யில் கசூரினா கடற்கரையில் உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் கசூரினா கடற்கரையில் நீர், சுகாதார வசதிகளை ஏற்படுத்தல் தொடர்பான வேலைகளை 22.08.2024 அன்று பார்வையிட நிதி உதவியை வழங்கும் உலக வங்கியினர் வருகை தந்து
வேலை முன்னேற்றம்
பொதுமக்களுக்கான பாதுகாப்பு
வேலை தொழிலாளர்களின் பாதுகாப்பு
என்பன தொடர்பாக பார்வையிட்டதுடன் பல்வேறு கருத்துக்களும் பரிமாற்றப்பட்டன.