சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான விசேட கலந்துரையாடல்

சுற்றுலாத்துறை முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10:30 மணியளவில் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் சிறந்த சுற்றுலாத்தளமாக விளங்கும் கசூரினா கடற்கரையின் சுற்றுலா மையச் செயற்பாட்டின் தற்போதைய செற்பாடுகள் மற்றும் சீர் செய்ய வேண்டிய முன்னேற்றகரமான செயற்பாடுகள் பற்றி ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் எவ்வாறான பணிகளை முன்னெடுப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வடமாகாண சுற்றுலாத் துறைப் பணிப்பாளர், திணைக்கள உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள்,பிராந்திய உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள் மற்றும் சபை செயலாளர், சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மற்றும் விடய உத்தியோகத்தர்கள், துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.