மீனவ கூட்டுறவு சங்கங்களிலிருந்தும் தலா ஒவ்வொரு வறிய மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி – 2024 (SDG Goals)

காரைநகர் பிரதேச சபையினால் 16.04.2025 அன்று நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் – 2024 (SDG) திட்டத்தின் கீழ் காரைநகரில் இயங்குகின்ற 9 மீனவ கூட்டுறவு சங்கங்களிலிருந்தும் தலா ஒவ்வொரு வறிய மீனவ குடும்பம் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு வாழ்வாதார உதவியாக ரூபா 100,000.00 பெறுமதியான வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

See insights

Boost a post

நிலை பேறான அபிவிருத்தி இலக்குகள் 2024 – (SDG Goals) – பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

காரைநகர் பிரதேச சபையினால் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தில் யா/ காரை ஊரி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் வித்தியாலய தரம் 5யை சேர்ந்த 26 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்ட போதான சில பதிவுகள்

காரைநகர் பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தை – (2024) முன்னிட்டு நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டி

காரைநகர் பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தை – (2024) முன்னிட்டு, 26.03.2025 காரைநகர் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு இடையேயான விறுவிறுப்பான கரப்பந்தாட்ட போட்டி கலாநிதி விளையாட்டு கழக மைதானத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் இளஞ்சுடர் விளையாட்டுக்கழகம், அம்பாள் விளையாட்டுக்கழகம், இளந்தென்றல் விளையாட்டுக்கழகம், கோவளம் விளையாட்டுக்கழகம், கலாநிதி விளையாட்டுக்கழகம் மற்றும் காரை சலஞ்சேர்ஸ் விளையாட்டுக்கழகம் என்பன பங்கேற்றன. இறுதிப்போட்டிக்கு இளஞ்சுடர் விளையாட்டுக்கழகம் மற்றும் இளந்தென்றல் விளையாட்டு கழகம் தகுதி பெற்றதுடன் சிறப்பாக விளையாடிய இளந்தென்றல் விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடியது. போட்டித் தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எமது நன்றிகள்.