தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனமான Clean Sri Lanka செயற்திட்டத்தின் கீழ் கசூரினா சுற்றுலா மையம் தூய்மைப்படுத்தும் சிரமதான பணி

முதல்கட்டமாக கசூரினா சுற்றுலா மையம் தொடக்கம் தூம்பில்பிட்டி எல்லை வரையிலான சுமார் 2.5Km தூரமான கடற்கரை பரப்பில் 06.02.2024 அன்று காலை 8.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை கசூரினா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இவ் சிரமதான பணிக்கு Save a Life நிறுவன அனுசரனை வழங்கியுள்ளதுடன் சிரமதான பணியில் காரைநகர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், இலங்கை தரைப்படை காரைநகர், இலங்கை கடற்படை காரைநகர், சனசமூக உத்தியோகத்தர், சனசமூக நிலைய அங்கத்தவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள், கமக்கார அமைப்புக்கள், கடற்தொழிலாளர்கள் சங்கங்கள் மற்றும் நலன்விரும்பிகள் என்போர் உள்ளடங்கலாக 200 பேர் வரை பங்குபற்றினார்கள். இவ் சிரமதான பணியில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா நாடுகளின் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி போத்தல்கள் என்பனவும் தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்டதுடன் வயது வேறுபாடு இன்றியும் பணியில் ஈடுபட்டார்கள் மற்றும் சிரமதான பணியின் மூலம் 2000 KG (2 Ton) மதிப்பிடும் அளவிலான திண்மக்கழிவுகள் சேகரிக்கப்பட்டதுடன் அவ்விடத்திலே தரம் பிரிக்கப்பட்டு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. இப் Clean Sri Lanka.. பணியில் பங்குபற்றிய அனைவருக்கும் எமது மனமார நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

செயலாளர்,உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள், பிரதேச சபை, காரைநகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *