பாடசாலை மட்டத்தில் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவித்தலுக்கான மரக்கறி கன்றுகள் வழங்கல்

பாடசாலை மட்டத்தில் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் வீட்டுத்தோட்டத்தில் மூலம் கிடைக்கும் மரக்கறிகளை தாமே பயன்படுத்தவும் வீடுகளில் தாமே மரக்கறி கன்றுகளை வளர்தல் தொடர்பான ஆசிரியர் வழிகாட்டல் என்பவற்றை பெறும் நோக்கத்தோடும் மரக்கறி கன்றுகள் காரைநகர் பிரதேச பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டன. 11 பாடசாலைகளான சுந்தரமூர்த்தி வித்தியாசாலை, சுந்தரமூர்த்தி வித்தியாசாலை ஆரம்ப பாடசாலை, வியாவில் சைவவித்தியாசாலை, ஆயிலி சைவஞானோதய வித்தியாசாலை, மெய்கண்டான் வித்தியாசாலை, ஊரி அ.மி.த.க சைவ வித்தியாசாலை, தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலை, வலந்தலை வடக்கு அ.மி.த.க வித்தியாசாலை, வலந்தலை தெற்கு அ.மி.த.க வித்தியாசாலை, வேரப்பிட்டி ஸ்ரீகணேசா வித்தியாசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை என்பவற்றுக்கு கத்தரி கன்றுகள், தக்காளி கன்றுகள், மிளகாய் கன்றுகள் தலா 15 என்ற வீதம் 495 கன்றுகளும் 2 பாடசாலைகள் ஆன காரைநகர் இந்துக்கல்லூரி மற்றும் யாழ்ற்ரன் கல்லூரி என்பவற்றுக்கு கத்தரி கன்றுகள், தக்காளி கன்றுகள், மிளகாய் கன்றுகள் தலா 25 என்ற வீதம் 150 கன்றுகள் வழங்கப்பட்டன. அத்துடன் அவற்றுக்கு தேவையான 500 KG நிறை கொண்ட கூட்டெருக்கள் மற்றும் 850 பைகள் 13 பாடசாலைகளுக்கு பங்கிடப்பட்டன.

12 ஒளியூட்டல் வேகக்கட்டுப்பாட்டு அடையாளப் பலகைகள் – ROAD SAFTY

பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் பாடசாலைக்கு அண்மிய வீதிகளில் வாகனங்களின் போக்குவரத்தினால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் முகமாக காரைநகர் பிரதேச சபையினால் 12 ஒளியூட்டல் வேகக்கட்டுப்பாட்டு அடையாளப் பலகைகள் 06 பாடசாலை வீதிகளில் நிறுவப்பட்டுள்ளன.

01. யா/வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை

02. யா/வலந்தலை வடக்கு அ.மி.த.க வித்தியாலயம்

03. யா/மெய்கண்டான் வித்தியாலயம்

04. யா/யாழ்ற்றன் கல்லூரி ஆரம்ப பிரிவு

05. யா/ஆயிலி சிவஞ்ஞானோதய வித்தியாசாலை

06. யா/சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயம் ஆரம்ப பிரிவு

மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு ரூபா 50000.00 பெறுமதியான இரு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காரைநகர் பிரதேச சபை செயலாளர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு ரூபா 50000.00 பெறுமதியான இரு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.