பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல்

எமது சபைக்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் முகமாக சபை ஒதுக்கீட்டில் நிலைபேறான_அபிவிருத்தி_இலக்கின் கீழ் (SDG)

2024.09.13 வெள்ளிக்கிழமை

காலை 10.00 மணிக்கு

காரைநகர் பிரதேச சபை மண்டபத்தில்

செயலாளர் தலைமையில் வாழ்வாதார உதவியாக 18 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஒரு மாத கொல்லைப்புற கோழிக்குஞ்சுகள் 15 வீதம் வழங்கி வைக்கப்பட்டன.

கால் நடை அபிவிருத்தி போதனாசிரியர் திருமதி. சுவர்ணன் ரபிந்தா அவர்கள் கோழி வளர்ப்பு தொடர்பாக அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனையினை வழங்கினார்.

“பெண்கள் நிலையான வளர்ச்சியைத் திறக்கும் சாவிகள் மட்டுமல்ல நாம் விரும்பும் ஆரோக்கியமான மற்றும் அதிக நெகிழ்ச்சியான சமூகங்களின் மையங்களும் இவர்களாவர்”