



காரைநகர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் பிரதேச புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் காரை சுத்தரமூர்த்தி வித்தியாசாலை
தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலை. ஊரி அ.மி.த.க வித்தியாசாலை மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 10:01:2024(புதன்கிழமை)பிரதேச சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இவ் செயற்றிட்டம் டெங்குச் செயற்பாட்டினை கட்டுப்படுத்தும் நோக்கோடு பிரதேச சூழலை தூய்மைப்படுத்தி உக்கும் கழிவுகளை தென்னங்கன்றுகளிக்கு பசளையாக்குவதுடன் உக்காத கழிவுகளை தரம்பிரித்து பிரதேச சபை மூலம் அகற்றுதல் பிரதான நோக்கமாகும்.
இவ் செயற்றிட்டத்தில் மூன்று பாடசாலை மாணவர்களுக்கு ஒவ்வொரு மாணவர்களுக்கு மூன்று தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பிரதேச சூழல் பசுமையடைவது குறிப்பிடத்தக்கதாகும்.
சுற்றுலாத்துறை முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை
10:30 மணியளவில் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் சிறந்த சுற்றுலாத்தளமாக விளங்கும் கசூரினா கடற்கரையின் சுற்றுலா மையச் செயற்பாட்டின் தற்போதைய செற்பாடுகள் மற்றும் சீர் செய்ய வேண்டிய முன்னேற்றகரமான செயற்பாடுகள் பற்றி ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் எவ்வாறான பணிகளை முன்னெடுப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் வடமாகாண சுற்றுலாத் துறைப் பணிப்பாளர், திணைக்கள உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள்,பிராந்திய உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள் மற்றும் சபை செயலாளர், சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மற்றும் விடய உத்தியோகத்தர்கள், துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
சபையின் செயற்பாட்டினை வினைத்திறனாக்கும் முகமாக சுகாதார ஊழியர்களுக்கான பாதுகாப்பு உடையுடன் களச்செயற்பாட்டில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி கட்டமைப்பில் சுகாதாரப் பணியாளர்கள் திண்மக்கழிவகற்றல் மற்றும் துப்பரவுப்பணி என்பன முக்கிய துறைகளாக விளங்குகின்றது. சபையின் செயற்பாட்டிற்கு சுகாதார தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணி அவசியமாகின்றது.
எனவே சுகாதார ஊழியர்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உடை வழங்கப்பட்டுள்ளது.
இவ் உடையினை
Save a live நிறுவனம் வழங்கியுள்ளதுடன் தினமும் பாதுகாப்பு உடையுடன் பணியாற்றுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் உடையினை வழங்கிய Save a live நிறுவனத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கமைய இலத்திரனியல் கழிவு சேகரிக்கும் செயற்றிட்டம் காரைநகர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சுற்றுச் சூழல் பாதுகாப்புச் செயற்றிட்டத்தின் கீழ் இலத்திரனியல் கழிவு சேகரிக்கும் வேலைத்திட்டம் காரைநகர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் இவ் வாரம் இடம்பெறுகின்றது.
"சுற்றாடல் நமது நண்பன்" என்னும் தொனிப்பொருளின் கீழ் சுற்றாடல் பாதுகாப்பு செயற்றிட்டத்தில் இலத்திரனியல் கழிவு சேகரிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.