காரைநகர் பிரதேச சபை வரலாறு
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 1421கீழ் 23 ஆம் இலக்க 2005.12.01 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி பத்திரிகையின் மூலம் 2006 ஏப்பிரல் 15ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் காரைநகர் பிரதேச சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 21.74 சதுர மைல்கள். இது காரைநகர் எனப்படும் ஒரு தீவை மட்டும் முழுமையாக உள்ளடக்கியிருப்பதால் நாற்புறமும் கடலினால் சூழப்பட்டுள்ளது. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, நெடுந்தீவு பிரதேச சபைக்கு 6 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 11 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இப் பிரதேசத்தில் சுமார் 10311 மக்களைக் கொண்ட 3514 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
இப் பிரதேச மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விவசாயமும் மீன்பிடி காணப்படுவதுடன் வணிகத்துறையும் முக்கிய பங்கை வகிக்கின்றன.
உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை காரணமாக 55 வீதமான மக்கள் தொடர்ந்தும் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக மின்சாரம், வீதி, உள்ளுர் உற்பத்தி சந்தை வசதிகள் மேம்படுத்தி வருகின்றன.
மேலும் வருடத்தின் பகுதி நாட்கள் இப் பிரதேசத்தில் உள்ள நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளில் உள்ள நீர் வற்றிப்போவதால் மக்களுக்கான குடிநீர் மற்றும் பாவனை நீர் என்பன அயற் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்டு வீடுவீடாக சென்று விநியோகிக்க வேண்டிய பாரிய பொறுப்பு இச் சபை மீது சுமத்தப்பட்டுள்ளது. அதனை திறம்பட செயலாற்றி வருகின்றது. திண்மக்கழிவு முகாமைத்துவ சேவையினையும் முன்னுரிமைப்படுத்தப்பட்டு செயற்படுகின்றோம். அவை மட்டுமல்லாது கட்டட அனுமதி, வியாபார உரிமம், ஆதன வரி, ஆதன பெயர்மாற்றம், காணி உப பிரிவிடல், ஒருங்கிணைத்தல், குடிபுகு சான்றிதழ், வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ், சுவீகரிக்கப்படாமைக்கான சான்றிதழ், ஆதன உரிமைச் சான்றிதழ் , சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதி பத்திரம், களியாட்ட வரி,பொது மயான பாவனை அனுமதி, கைத்தொழில் வரி செலுத்துதல் போன்ற சேவைகள் வழங்கி வருகின்றது என்பதில் பெருமை கொள்கின்றது. 2022 ஆண்டில் இருந்து இலவச ஆயுள்வேத வைத்திய சேவை வடக்கு உப அலுவலகத்தில் இயங்கி வருகின்றது. எமது சபையின் கீழ் முன்பள்ளி மாணவர்களுக்கான பாடசாலையும் கல்வி செயல்பாட்டில் இயங்குகின்றன.
பிரதேச சபையில் தவிசாளர்கள்
- பிரதேச சபையின் செயலாளர்கள்

காரைநகர் பிரதேசத்துக்கான வரைபடம்


காரைநகர் கிராம சேவகர் பிரிவுகள்