உயர் தொழில் மீதான வரி
குறித்த வியாபார நிலையங்களின் கடந்த ஆண்டின் பெறுவனவுகளுக்கேற்ப வரி செலுத்துவதற்கு கட்டளையிட முடியும் என்பதுடன் அதன் உச்சக் கட்டணமாக ரூபா 3000.00 இனை உயர் தொழில் வரியாக விதித்து அறவீட்டினை மேற்கொள்ள முடியும்.
1. கொமிசன் முகவர்
2. கட்டட ஒப்பந்தகாரர்
3. காசு கடன் கொடுப்போர்
4. தரகர்கள்
5. சாரதி பயிற்சி நிலையம்
6. ஏல விற்பனையாளர்
7. பண முதலீட்டாளர்கள்
8. தனியார் கல்வி நிலையங்கள்
9. காப்புறுதி முகவர்கள்
10. ஆலோசனைச் சேவை ஸ்தாபனங்கள்
11. சுற்றுலா பேரூந்து சேவை
12. பொருட்கள் ஏற்றி இறக்கல் சேவை
13. நகை ஈடு பிடித்தல்
14. தேசிய மற்றும் பிறநாட்டு வங்கிகள்
15. உத்தரவுபெற்ற நிலஅளவையாளர் சேவை
16. உத்தரவு பெற்ற படவரைஞர் சேவை
17. தனியார் வைத்திய சாலைகள் மற்றும் ஆலோசனை நிலையங்கள்.
நடைமுறைகள்
1. வியாபார விண்ணப்பம் வழங்கல்
வியாபார விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்
அ. வியாபார நிலையம் அமைந்துள்ள காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணம்.
ஆ. நிலுவையற்ற சோலைவரி அறவீட்டு அறிக்கை
இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்பட்சத்தில் வரி அறவிடப்படும்